Friday, 18 September 2015

Blood Moons: அன்று வந்ததும் அதே நிலா


வேதாகமத்தின் பிரகாரம், "ஆதியில் நான்காம் நாள் கடவுள் பகலையும் இரவையும் படைத்து, அவை அறிகுறிகளையும், பருவகாலங்களையும், நாட்களையும், ஆண்டுகளையும் குறிப்பதாக இருக்கட்டும்" என்றார் (Genesis 1:14). 


வேதாகம காலத்திலும் அதற்கு பிந்தய காலங்களிலும் யூதர்கள் சம்பந்தப்பட்ட பல முக்கிய வரலாற்று சம்பவங்கள் Blood Moon (செந்நிலா) தோன்றிய நாட்களை அண்டிய காலங்களில் இடம்பெற்றதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். சூரிய அஸ்தமனம் அல்லது சூரிய உதயத்திற்கு அண்டிய கணங்களில் இடம்பெறும் முழு சந்திரகிரகணத்தில், சந்திரன் இரத்த சிவப்பாக மாற, நிலா..Blood Moon (செந்நிலா) எனும் பெயர் பெறுகிறது.  


தொடர்ந்து நான்கு செந்நிலாக்கள் தோன்றுவதை Tetrad of Blood Moons (நான்கென்தொகுதியின் செந்நிலாக்கள்) என்கிறார்கள். இந்த நான்கு செந்நிலாக்களும் யூதர்களின் பண்டிகை (Jewish Feast Days) நாட்களில் தோன்றினால் வில்லங்கம் பிள்ளையார் சுழிபோடுமாம் (நேற்று பிள்ளையார் சதுர்த்தியாம்).


இயேசு கிறிஸ்து பிறந்ததும் சிலுவையில் அறையப்பட்டதும் Blood Moon நாட்களில் என்று NASA வின் தரவுகளை ஆதாரமாக காட்டுகிறார்கள். ஆனால் அவை Tetrad of Blood Moonகள் அல்ல. இயேசு பிறக்கும்போது ஏரோது மன்னன் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளை கொன்றான் என்கிறது வேதாகமம். இயேசு சிலுவையில் இறக்கும் போது ஏற்பட்ட "அந்தகார இருள்" Blood Moonன் தாக்கம் என்கிறார்கள் (Luke 23:44).


கிறிஸ்துவிற்கு பின் யூதர்களின் பண்டிகை நாட்களை ஒட்டிய Tetrad of Blood Moons மூன்று தடவை நடந்திருக்கிறதாம். இந்த மூன்று முறையும் யூதர்களின் வாழ்க்கை மட்டுமல்ல முழு உலகின் வரலாறே புரட்டி போடப்பட்டுள்ளது.1493-1494 காலப்பகுதியில் யூத பண்டிகைகளை அண்டிய Tetrad of Blood Moons இடம்பெற்ற போது Spain நாட்டிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.1492ல் Spain மன்னன் Ferdinandம் அரசி Isabellaவும் யூதர்களை கத்தோலிக்க மதத்தை தழுவ நான்கு மாதங்கள் அவகாசம் கொடுத்தார்கள், தழுவாதவார்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். இந்த உத்தரவிற்கமைய நான்கு இலட்சம் யூதர்கள் Spain நாட்டைவிட்டு People smugglers உதவியுடன் வெளியேறினார்கள். உலகின் முதலாவது இடப்பெயர்வு இதுவாகதான் இருக்கும். இந்த பின்னனியில் தான் கொலம்பஸ் Spainலிருந்து கப்பலேறுகிறார். இவரது பயணத்திற்கான நிதி Spainலிருந்து தப்ப நினைத்த யூத வியாபாரிகளால் அளிக்கப்பட்டதாகவும், கொலம்பஸும் ஒரு யூதர் என்றும் நவீன வரலாற்றாசியர்கள் நிறுவ முயல்கிறார்கள்.  Spain ஆட்சியாளர்களிடமிருந்து யூதர்களை காப்பாற்றும் நோக்கிலமைந்த கொலம்பஸின் கடல் பயணங்கள் யூதர்களிற்கு ஒரு பாதுகாப்பான தளபிரதேசத்தை கண்டறிந்து அவர்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்கிறார்கள். எது எப்படியோ 1493-1494ல் Blood Moon கொண்டு வந்த பெரிய வில்லங்கம்.. அமெரிக்கா


1948-49ல் மீண்டும் இந்த Blood Moons நிகழ்வு இடம்பெற்ற பொழுது யூதர்கள் தங்களிற்கென்றொரு தனிநாட்டை நிறுவினார்கள்.. இஸ்ரேல் என்ற குட்டி வில்லங்கம் உருக்கொண்டது. 


கி.பி 70ல் ரோமானியர்களால் Jerusalem அழிக்கப்பட யூதர்கள் தங்கள் தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்தார்கள். அடுத்து வந்த 1878 வருடங்களிற்கு உலகின் பல்வேறு நாடுகளில் ஏதிலிகளாய் அலைந்தாலும் தமது அடையாளத்தை பாதுகாத்தார்கள், யூதர்கள். இரண்டாம் உலகமகா யுத்தத்தில் இனப்படுகொலைக்கு (Holocaust) ஆளான யூத இனத்திற்கு இஸ்ரேல் என்ற தாயகம் மே 14, 1948 அன்று சர்வதேசத்தால் அரபு நாடுகளின் எதிர்பிற்கு மத்தியில் வழங்கப்படுகிறது. 


இஸ்ரேல் சுதந்திரம் பிரகடனப்படுத்தி 24 மணித்தியாலங்களுக்குள் எகிப்து, யோர்தான், சிரியா, லெபனான் மற்றும்  ஈராக் தேசங்கள் இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுத்தன. பலம்பொருந்திய அரபு நாட்டு படைகளை 15 மாத கடும் சமரில் மிக குறைந்த ஆயுத வளங்களுடன் தன்னந்தனியனாக இஸ்ரேலியர்கள் தோற்கடித்து தமது தாய்நிலத்தை பாதுகாத்து வீரவரலாறு படைத்தனர். ஆனால் இந்த யுத்தத்தின் இறுதியில் ஜநாவின் அனுசரணையில்
ஏற்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் Jerusalem, இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு Jersualem ஜோர்தானிற்கு வழங்கப்பட்டது.1967-67 காலப்பகுதியில் Tetrad of Blood Moons யூத பண்டிகைகளை அண்டி மீண்டும் நிகழ்ந்த பொழுது, Six day war என்று வர்ணிக்கப்படும் யுத்தத்தில் அரபு நாடுகளை தோற்கடித்து Jerusalem நகரை இஸ்ரேல் முழுமையாக தனதாக்கிகொள்கிறது. 2,000 வருடங்களிற்கு பின்னர் யூதர்களின் புனிதநகரம் முழுமையாக அவர்கள் வசமாகிறது. இஸ்ரேலை தாக்க எதிரிகள் திட்டமிட, இஸ்ரேலியர்களின் அதிரடித் தாக்குதலில் Judea, Samaria, Gaza, Sinai Peninsula மற்றும் Golan Heightsம் இஸ்ரேலியர்கள் வசமாகிறது. 


இப்பொழுது 2014-2015ல் மீண்டும் யூத பண்டிகைகளை ஒட்டி Tetrad of Blood Moons நிகழ்கிறது.  இந்த காலப்பகுதியின் முக்கியத்துவம் இன்னும் இரண்டு காரணங்களால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறதாம். 


முதலாவது, கிமு 3-2 ற்கு பின்னர் முதல்முறையாக வியாழ (Jupiter) வெள்ளி (Venus) கிரகங்கள் குவிந்த (converge) போது 30 Jun 15ல் வெளிப்பட்ட Star of Bethlehem. இதற்கு முன் இந்த நட்சத்திரம் தோன்றிய போது பிறந்தது வேறு யாருமல்ல... உலகை பாவத்திலிருந்து மீட்க மனிதனாய் அவதரித்த தேவகுமாரன் இயேசு கிறிஸ்து. 


இரண்டாவது, இந்த வருடம் யூதர்களின் Shemitah வருஷம் எனப்படும் ஏழாண்டுகளிற்கு ஒருமுறை வரும் ஓய்வு ஆண்டில் விழுகிறதாம். அதுக்கும் மேல என்பதுபோல போல் இந்தாண்டு ஏழேழு ஆண்டுகளிற்கொருமுறை வரும் சூப்பர் Shemitah வருடத்திலும் வருகிறதாம். 
Shemitah ஆண்டுகள் வரலாற்றில் பல தாக்கங்களை ஏற்படுத்தி சென்றிருக்கின்றன.  2001ல் Twin Towers தகர்க்கப்பட்ட சம்பவமும் 2008ல் தொடங்கிய GFC பிரச்சினையும் Shemitah வருடங்களிலேயே இடம்பெற்றன. 

இனி தற்போதை நிகழ்ந்து கொண்டிருக்கும் Tetrad of Blood Moons காலப்பகுதியை நோக்கினால், 
April 2014ல் யூதர்களின் பஸ்கா பண்டிகையை ஒட்டி நிகழ்ந்த முதலாவது  Blood Moon காலத்தில் இன்னுமொரு காசா யுத்தமும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ISISன் எழுச்சியும் இடம்பெற்றன. 


அத்தோடு வேதாகமத்தில் எதிர்வு கூறப்பட்ட கிறிஸ்தவர்களின் சிரம் வெட்டப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது. "...இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும்... (Rev 20:4)


Oct 2014ல் யூதர்களின் Feast of Tabernacle காலத்தில் இடம்பெற்ற  இரண்டாவது blood moon காலத்தில் தான் அமெரிக்காவில் முதலாவது Ebola virus இறப்பு இடம்பெற்றது.  


ஈரானுடன் அமெரிக்கா செய்யவிருக்கும் அணுஆயுத உடன்படிக்கையை எதிர்த்து இஸ்ரேல் பிரதமர் Netanyahu அமெரிக்க காங்கிரஸில் Apr 3, 2015ல் ஒரு வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார். இஸ்ரேல் தன்னை தானே காத்து கொள்ள எந்த நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்று மோசே கூறிய "Be strong and resolute, neither fear nor dread them" வார்த்தைகளை நினைவுபடுத்தி அவர் உரையாற்றிய அடுத்த நாள் யூதர்களின் பஸ்கா பண்டிகை, அத்தோடு மூன்றாவது Blood Moonம் வெளிப்படுகிறது.


நான்காவது Blood Moon, Sep 28 2015 அன்று வெளிப்படுமாம், அது யூதர்களின் Feast of Tabernacle காலம்.  இந்த நிகழ்வின் பின் என்ற நடக்கும் என்று பல எதிர்வுகூறல்கள் வெளிவந்திருக்கின்றன. 
யூத அறிஞர்கள் இஸ்ரேலை சார்ந்து ஒரு பாரிய வரலாற்று நிகழ்வு இடம்பெறும் என்று எதிர்வு கூறுகிறார்கள். 


வேதாகம அறிஞர்கள் கிறிஸ்தவ நெறிக்கு எதிராக இடம்பெறும் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கான (Gay marriage) அங்கீகாரம் உட்பட்ட நிகழ்வுகளை மேற்கோள் காட்டி இது கிறிஸ்துவின் இரண்டாவது வருகைக்கான காலம் என்கிறார்கள். 


"கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும்  சந்திரன் இரத்தமாகவும் மாறும்" (Joel 2:31). 


Rapture (எடுத்துகொள்ளப்படல்) என வேதாகமம் குறிப்பிடும் இந்த நிகழ்வு, மரித்தோர்கள் உயிர்த்தெழுந்து அவர்களுடன் சேர்த்து கிறிஸ்துவுக்குள் வாழ்பவர்கள் மேகத்துக்குள் எடுத்து கொள்ளப்பட்டு கடவுளை சந்திப்பார்கள் என்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை குறிக்கிறது. 


நிற்க.....
இனப்படுகொலை சந்தித்த யூத இனத்திற்கு ஜநா அனுசரணையில் தனிநாடு கிடைத்தது 1948ல் வந்த Blood Moon காலத்தில்..


இந்த வாரம் தமிழீழத்தில் இடம்பெற்ற போர்குற்றம் பற்றிய ஜநா அறிக்கை வெளிவந்திருக்கிறது, அடுத்த கிழமை Blood Moon வருகிறது.. யூதர்களிற்கு அருள்பாலித்த செந்நிலா நமக்கும் கருணைகாட்டுமா ? 

அன்று வந்ததும் அதே நிலா.. 

1 comment: