Friday, 5 June 2015

Vijay TVயின் மகாபாரதம்



ஆய்ஷ்மான் பவ...
நான் விரும்பி ரசித்த Vijay TVயின் மகாபாரதம் ஒரு வழியாக பார்த்து முடிச்சாச்சு. நான் மகாபாரதம் பார்த்த கதையும் மகாபாரதம் போல் நீண்டது நெடியது. அதை விடுவம்.
"அகிலம் போற்றும் பாரதம், 
இது இணையில்லா மாகாவியம்"
வழமையா ஒன்றில பிடிச்ச விஷயத்தை பற்றி தான் கனக்க கதைப்பம், பீத்தி தள்ளுவம். மகாபாரதத்திலும் அனுதாப வாக்கு வாங்கும் மித்திரன் கர்ணணோ, உலகின் தலைசிறந்த வில்லாலன் விஐயனோ, அல்லது பாண்டவர்களின் தத்துவாசிரியர் & strategist Lord V. கிருஷ்ணன் (இயக்கப்பெயர் கண்ணன்) தான் வழமையான ஹீரோக்கள். இந்த பதிவு எனக்கு பிடித்த கதாபாரத்தை பற்றியதல்ல. மாறாக மகாபாரதம் பார்த்தபோது என்னை மிகவும் வெறுக்க வைத்த பாத்திரம் திரெளபதி பற்றியது.
"தர்மம் இங்கு பலியானதே"
துரியன் அநியாயத்தின் உருவமாய் அதர்மியாய் உலாவந்தாலும் அவனது கம்பீரமும் விட்டு கொடாமையும் பின்வாங்காத்தன்மையும் அவனை வெறுக்க வைக்கவில்லை. ஆனால் திரெளபதியை ஏனோ வெறுத்தேன்..
"அதர்மம் இங்கு வெற்றியை பற்றியதே"
சகுனியின் சதிகள் வியக்கவும் வியர்க்கவும் ரசிக்கவும் ரத்தம் கொதிக்கவும் வைத்தாலும் அவனை வெறுக்க வைக்கவில்லை.. ஆனால் திரெளபதியை ஏனோ வெறுத்தேன்.
"சதி செய்த சூழ்ச்சி தனில் கதியின்றி போயினரே"
குழப்பத்தின் உருவமாய் தன்னம்பிக்கை குலைந்த பாத்திரமாய் வலம் வந்து CNN வரமுதலே live war coverage பார்த்த திருத்தராஷ்டிரனும் அநீதிக்கும் பாசத்திற்குமிடையில் அல்லாடிய காந்தாரியையும் வெறுக்க தோன்றவில்லை. ஆனால் திரெளபதியை ஏனோ வெறுத்தேன்.
"விதி ஆடும் விளையாட்டில்
சதிவலையில் வீழ்ந்தனரே"
நித்திரையிலிருந்த பாண்டவர்களின் வாரிசுகளை கொன்று போர்க்குற்றம் புரிந்து "ஜெனிவாவில் தண்டனை பெற்ற" அஸ்வத்தாமனை நினைத்தாலும் பரிதாபம் வந்ததே ஒழிய வெறுப்பு வரவில்லை. ஆனால் திரெளபதியை ஏனோ வெறுத்தேன்.
"கதியின்றி தவித்த ஜீவன்களாயினரே"
அநீதி நிகழ்ந்த வேளையில் மெளனம் காத்த பிதாமகர் பீஷ்மரும் ஏகலைவனை iPad பாவிக்க விடாமல் பெருவிரல் அறுத்த மகாகுரு துரோணரும் வெறுப்பு பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால் திரெளபதியை ஏனோ வெறுத்தேன்.
"ஐகத்தினில் விதியை வென்றவர் யார்"
திரெளபதியை ஏனோ வெறுத்தேன்.
ஏன் ? தெரியல்ல
எதற்காக ? புரியல்ல
எப்படி ? முடியல்ல
திரெளபதியை ஏனோ வெறுத்தேன்...
சுபம் உண்டாகட்டும் !
நலமோடு வாழ்க !

No comments:

Post a Comment