Friday, 26 June 2015

Commerceகாரர்முற்குறிப்பு 🌛
தம்பி JK Maths காரரை மையமாக வைத்து கடந்த வாரம் "சப்பல் மன்னர்கள்" வரைந்தார், என்னையும் commerce காரரை பற்றி எழுதுமாறும் கேட்டுக்கொண்டார்.
புலியை பார்த்து ஏதோ ஒரு மிருகம் தனக்கும் வரி வரைந்து கொண்டதாம். அதைப்போல ஈழத்து சுஜாதா ஜேகேயின் "சப்பல் மன்னர்களை" தழுவி கொழும்பில் commerce படித்த என் அனுபவத்தை மையப்படுத்தி நான் வரைந்த உளறல். 🚯
குற்றம் பொறுத்தருள்க...

கொமர்ஸ்காரர் 💰
கொமர்ஸ்காரர் ஒரு தனி ரகம், அவர்களும் ஒரு வகை மன்னர்கள் தான், சப்பலில் அல்ல, A/L வாழ்க்கையை அனுபவித்ததில் அவர்கள் தான் உண்மையான A/L மன்னர்கள். படிப்போடு நல்லா பம்பலடிக்கவும், ஸ்டைலா பெட்டையளை சுழற்றவும் தெரிந்த, சூப்பர்காய்கள்.

O/L முடித்து Commerce படிக்க வாற குறூப்புகள் பலவகை.

முதலாவது குறூப் commerceல் கண்டதும் கொண்ட காதலால் படிக்கவாற கோஷ்டி. O/L ல் அநேகமா ஒகஸ்ரின் மாஸ்டர் மாதிரி ஆக்களிட்ட படிச்சு, கணக்கியலில் வசியப்பட்டு வாற சனம். இவர்கள் கண்ணும் கருத்துமாய் படிப்பார்கள். பள்ளிக்கூடத்திலும் tuitionலும் ஒரு சொல்லு விடாமல் notes எடுப்பார்கள், part 1 க்கு வேற part 2 க்கு வேற, schoolற்கு வேற tuitionற்கு வேற என்று கன கொப்பிகள் வைத்திருப்பார்கள். 📖

Management enter பண்ணோணும், அதுவும் meritல் J'puraவில் B.Sc in Accounting என்ற இலட்சியத்தில் "எதையும் plan பண்ணி செய்யோணும்" ரகம். அநேகமாக இவர்கள் கள்ளமாக ஒரு வருடத்திற்கு முதலே syllabus cover பண்ணி, சோதனைக்கு ரெடியாகி private candidate ஆக எக்சாமும் (exam) எடுத்து trial பார்த்திருப்பினம், வெளில சொல்லமாட்டினம்.🐄

இரண்டாவது குறூப், ஒரு மாதத்திலிருந்து ஒரு வருஷம் வரை Maths அல்லது Bio படிச்சிட்டு, வெறுத்து போய் and/or நொந்நு நூடில்ஸாகி commerce படிக்க வாற கோஷ்டி. அநேகமாக இவர்களிற்கு O/Lல் 4ற்கு மேற்பட்ட Dகள் கிடைச்சிருக்கும், prestige பார்த்து அல்லது அம்மா engineer ஆகோணும் என்று ஆசைப்பட, தேற்றம் நிறுவப்போய் குxxயில் சூடு வாங்கின குறூப். 🔢

இவையல் commerceல் crash course செய்யிறாக்கள். Past papers ஐ ஆராய்ந்து trend கண்டு பிடித்து predict பண்ணி examல் புகுந்து விளையாடும் கோஷ்டி. இவயலிட்ட மிஞ்சி மிஞ்சி போனா நாலு கொப்பி தான் இருக்கும். மிச்சம் ? அதுக்கு தான் உற்ற நண்பர்கள் இருப்பினம். இவர்களின் உற்ற நண்பர்கள் முதல் குறூப்பில் (commerceஐ காதலிப்பவர்கள்) இருப்பினம். இவர்கள் ஆளவந்தான் மாதிரி, வாத்திமாரிடம் பாதி நண்பர்களிடம் பாதி என்று படித்து கொழும்பு universityயில் B.Com செய்ய துடிக்கும் குறூப்...அங்க தானே பெரிய மரங்களும் வடிவான பெட்டையளும் இருப்பினம். 🌹

இன்னொரு கோஷ்டி Maths, Bio படிக்க O/Lல் results காணாதவர்கள். படிப்பில் பயங்கர ஆர்வமுள்ள இவர்கள் வேறு வழியில்லாமல் commerce படிக்க வருவார்கள். கஷ்டப்பட்டு படிப்பார்கள், வெற்றியும் பெறுவார்கள். அந்நியனில் வாற அம்பி குறூப்...பால்குடி..

பிறிதொரு குறூப் பள்ளிக்கூடம் வருவதிற்காக commerce ஐ சாக்காக வைத்து பள்ளிக்கூடம் வரும் கூட்டம். இவர்களிடம் மிஞ்சி மிஞ்சி போனால் 3 கொப்பி தான் இருக்கும். Schoolல் notes எடுக்க இவர்களிற்கு நேரம் இருக்காது, ஏனென்றால் இவர்கள் அநேகமாக cricket, soccer team இலோ அல்லது ஏதாவது சங்கம் யூனியன் அலுவலாகவோ ஓடித்திரிந்து கொண்டிருப்பார்கள். 

வேற சிலர் tutionற்கு வருவார்கள், ஆனா வரமாட்டாங்கள் ரகம். அதாவது "எல்லோரும்" வரும் போது வருவார்கள், போவார்கள், ஆனா வகுப்புக்குள் வரமாட்டாங்கள், மானஸ்தன்கள். இவர்கள் cover பண்ணும் "syllabus" வேற பாருங்கோ. 🏆

இன்னொரு குறூப் படிக்கிற மாதிரி நடிக்கிற குறூப். சீரியஸா வாத்திமாரிடம்...வகுப்புக்கு முன், வகுப்பில், வகுப்பிற்கு பின்..கேள்வி கேட்டு துளைத்து எடுப்பான்கள். மண்டைக்காய் ரேஞ்சிக்கு பில்டப் குடுப்பாங்கள், withdrawals examல் சாயம் வெளுக்கும். பிறகு "குதிரை" ஏறி கம்பஸ் வந்து "முதுகு" சொறிந்து பாராளுமன்றம் வரை செல்லக்கூடிய திறமைசாலிகள்.🏇

பொதுவாக Commerce படிக்கிற பெடியளிட்ட commitment எதிர்பார்க்கலாம். Tution cut பண்ணி சந்திரன் மாஸ்டரிட்ட படம் பார்க்க போற ரகம் இல்லை. இவங்கள் படிக்கிறதே Tution வரத்தானே, ஆனபடியால் இவங்கள் school மதில் பாய்ந்து போய், அதுவும் கண்டிப்பாக school நேரத்தில் மட்டும் theatreல் "கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டும் படம்" பார்ப்பார்கள்.🍟

தம்பி JK தேற்றம் நிறுவுறது அது இது என்று பினாத்துவார். நாங்களும் நிறுவினாங்கள் தம்பி தேற்றம், அளவையியலில்...
அழகானவர்கள் எல்லாம் கறுப்பானவர்கள்
கறுப்பானவர்கள் எல்லாம் நல்லவர்கள்
ஃ அழகானவர்கள் எல்லாம் நல்வர்கள்.
எப்புடி ? நாங்களும் ஏலும் 💪

Sigmund Freud படிக்கும் போது ரம்போ ராஜரத்தின்ட double meaning பகிடிகள் விளங்காமல் சிரித்து பிறகு அதே பாடத்தை கேசவனிட்ட விளங்கி படிக்கேக்க சீரியாசா கேட்டு, இப்படி commerce படிக்கிற பெடியல் பட்ட பாடு பெரும்பாடு. 🎎

பொருளியல் Naufel மைக் இல்லாமல் சங்கத்தில் கத்தி கத்தி படிப்பிக்கும் போதும் மைக் வைத்து tower hallல் படிப்பிக்க கத்தும் போதும் அலுங்காமல் கலங்காமல் கவனம் சிதறாமல் "அதோ மேக ஊர்வலம்" போவார்கள் commerce காரர் . 💘
....................................................................

1990 புரட்டாசி 26 திலீபன் நினைவுநாள் அன்று யாழ்ப்பாண தளபதி பானு யாழ்ப்பாண கோட்டையில் கொடியேற்றி, 10ம் நாள் இயக்கம் open pass அறிவிக்க எங்கட batchன் யாழ்ப்பாண exodus நடந்தது. இரவில பரா லைட் போட்டு ஹெலியடிக்க...கொம்படி வெளி கடந்து, வவுனியாவில் புளொட் காரர் தாண்டி கொழும்பு வந்த போது எம்மை அரவணைத்தது கொழும்பு இந்து. நாங்கள் வெளிக்கிட்டு இரண்டாம் கிழமை யாழ்ப்பாணம் வெட்கி தலை குனிய வேண்டிய வரலாற்று துன்பியல் நிகழ்வான முஸ்லீம்களின் வெளியேற்றம் நடந்தேறியது. 👎

பொலிஸ் கைதுகளிற்கும் குண்டு வெடிப்புகளிற்கும் மத்தியில் படித்த கோஷ்டி இது. இயக்கத்தின் உளவு பிரிவு ஒரு பக்கம், அதை மோப்பம் பிடிக்க ஈபிகாரன் இன்னொரு பக்கம் என்று ரெண்டு பிரிவிற்கும் மத்தியில் படித்து கரைசேர்ந்த குறூப் இது. 💥
குடு, குடி, ப்ளூ ஃபிலிம் இவற்றுக்கு மத்தியிலும் கொழும்பு இந்துவிலிருந்தும் மற்ற பாடசாலைகளிலிருந்தும் அள்ளு கொள்ளையாய் கம்பஸ் enter பண்ணின கோஷ்டி இது. 👍

கட்டுக்கோப்பான யாழ்ப்பாண சமூகமும் பாடசாலைகளும் போட்ட அத்திவாரத்தில் கொழும்பில் வீடு கட்டியவர்கள், இந்த கோஷ்டி. தவமாய் உழைத்து, கட்டுப்பாட்டை கவசமாக்கி வாழ்வை வளமாக்கியவர்கள், இந்த குறூப்.🏠
இளமை
இனிமை
வலிமை

No comments:

Post a Comment