Sunday, 3 May 2015

உத்தம வில்லன்


நான்கு ஜாம்பாவான்களின் படைப்பு ஓகே கண்மணி.
ஒரு நிருத்தஞ்சய*படைப்பாளியின் ஜாம்பவ படைப்பு உத்தம வில்லன்.

"எவரும் எந்த பொருளும் தெய்வமானால்
கும்பிட்ட கூடம் போதும்
குப்பை கொண்ட சொர்க்கம் சேரும்
அகில உலகும் அழியும் அழியும்"

கதை, திரைக்கதை, இயக்கம், வசனம், இசை, கவிதை, பாடல், கதாநாயகன், வில்லன், காமெடியன் என இன்னாரென்ன திரையிலும் திரைக்கு பின்னாலும் "உத்தம வில்லனில்" ஆல் இன் ஆல் அழகுராஜா கமல்ஹாசன் தான்.

"நீ தொடாத உச்சம் உண்டா
சாதனைகள் மிச்சம் உண்டா
நான் கரைந்தேன் உன்னை கண்டால்"

நகுலேஸ்வரன் மாஸ்டர்ட டியூடரியில் கலைவிழாவிற்கு வில்லுப்பாட்டு செய்த பிறகு அதன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு யாழ்ப்பாணத்தில் என் பாட்டாவோடு பல அருமையான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை காணவைத்தது. உத்தம வில்லன் மூலம் அருகி வரும் அந்த கலையை மீண்டும் ஒருமுறை ரசிக்கும் வாய்ப்பு கிட்டியது.

"தானதந்தத்டோடு எழு
சந்தங்களும் தாழத்தொடு
சந்தங்களும் தாழத்தொடு
வான வம்பை உருவித்த கை
முன் தூமியோடு (ஆமா)
முன் தூமியோடு
அத்தனையும் மேளத்தோடு"

மன்னரை கக்கூஸிற்கு பல்லக்கில் அழைத்து செல்லும் காட்சி நம்ம JK யின் "படலையில் பதிவான "கக்கூஸ்" சிறுகதையின் தழுவல். அம்மாவாண சத்தியமா.. தம்பி JK தயங்காமல் கேஸ் போடலாம்.

"மாலா ஒளியாம் நியாயிரும் கூட
மற்றோர் யுகத்தில் போகும் கரிந்தே"

பாலச்சந்தர் வரும் காட்சிகளும் வசனங்களும் உணர்ச்சி ததும்புபவை. கமல்ஹாசன் தனது குருவுக்கு வெள்ளித்திரையில் அளித்த அழியா பிரியாவிடை உத்தம வில்லன்.

"சாகாவரம் போல் சோகம் உன்டோ
கேளாய் மன்னா!!
தீரா கதையை கேட்டபார் உண்டோ"

உத்தம வில்லனில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் அழகு தமிழ். வசனங்களாகட்டும் பாடல் வரிகளாகட்டும், தமிழுக்கு அமுதென்று பெயர் என்பதை உணரவைத்தது, ரசிக்க வைத்தது. தமிழை வாழ வைப்போம் என்று மேடையில் பலர் முழங்க செந்தமிழை அதன் செழுமை குன்றாமல் எளிமையாக அரங்கேற்றிய கமல்ஹாசன் வாழ்க.

"பூதம் ஐந்தும் பொருந்திய பொருளோ
வேதம் நான்கும் விளங்கிய உருவம்
இரவும் பகலும் அகமும் புறமும்
பிரிவற்றிடும் சாக வரமுடையான்
புரிந்திது புரிந்திது புரிந்திடு நீ
முடிவுரை என்றொன்று இல்ல காவியம் நான்"

லிப் லாக் சீனில் நடித்து கமலின் முத்த நடிகைகள் லிஸ்டில் promotion கிடைத்த ஆன்டரியாவிற்கு ஒரு பாட்டு சீன் குடுக்காதது வருத்தமளிக்கறது. கொடியில் பலாப்பழம் போல் கமலை பூஜா இடுப்பில் தூக்குவது too romantic for Tamil cinema.

"முத்தத்தின் ஆசானே
உனை உணர்வாய் செய்தாய்
லவ்வா லவ் தான்
பெரிதான வேலைக்கு
பிள்ளையார் சுழி தான் முத்தம்
வாடி லவ்வா"

உத்தம வில்லன் - One Man Show, an Excellent and Emotional One Man Show.

"விழுங்கி துலங்கிடும்
வம்சம் வாழ
வாழும் நாளில் கடமை செய்ய
செய்யுள் போல் ஒரு
காதல் வேண்டும்
காதல் வேண்டும்
செய்யுள் போல் ஒரு- காதல் வேண்டும்"

*நிருத்தஞ்சய - சாகாவரம் பெற்ற

No comments:

Post a Comment