Saturday, 30 May 2015

மாஸ் என்கின்ற மாசிலாமணிபேய் உலாவிற சனிக்கிழமை இரவில
பேய் குளிரடிக்கிற மெல்பேர்ண் இரவில
பேய(ர)ழகி நயன்தாராவை பார்க்கிற ஆசைல
பேய்த்தனமா மனிசியை விட்டிட்டு படம் பார்க்க போனேன்.
மாஸ் என்கின்ற மாசிலாமணி (MEM)
தமிழ் சினிமாவிற்கு இது பேய்ப்பட ஸீஸன். இந்த பேய் மோகத்தில் வெங்கட் பிரபு விழுந்து விசர்படங்கள் நடித்துக்கொண்டிருந்த பேயன் சூர்யாவை வைத்து எடுத்த பேய் படம் MEM.
ஈழத்தமிழரை பேய்க்காட்ட கனடா தமிழரா ஒரு சூர்யா வந்து எங்கட வலியை திரையில் ஒரு வசனத்தில் சொல்லுறாராம். வழமையா இப்படியான சீனிற்கு கை தட்டுற எங்கட சனம், இப்ப எங்களை பேய்க்காட்டுறாங்கள் என்று தெரிந்ததால பேசாமல் இருந்திட்டுதுகள். எங்களை பேயனாக்கி படம் ஓட்டுற பேய்க்காட்டலை கோடம்பாக்கம் இனியாவது நிறுத்தணும்.
நயன்தாரா நயன்தாரா என்ற பேய(ர)ழகியை படத்தில காணவில்லை. நயன்தாராவிற்கு பேய் கரெக்டர் இல்லாத்தால கனக்க ஸீன் குடுக்கல்லயோ ? இல்லாட்டி பிரேம்ஜி தான் ஹீரோயினோ ? நயன்தாரா படம் என்டு சொல்லி பேய்க்காட்டி போட்டான்கள், பேய் விசரன்கள்.
யுவன் சங்கர் ராஜா கொஞ்ச காலமாகவே மொக்கை இசை தந்தவர் இந்த படத்தில பேய்த்தனமா இசை அமைச்சிருக்கிறார்.
வெங்கட் பிரபு சிக்ஸர் அடிக்க போய் பேயன் மாதிரி க்ளீன் போல்ட் ஆன பேய்க்கதை MEM.
மாஸ் என்கின்ற மாசிலாமணி:
பேயை பிடித்தவர்களிற்கு மட்டும்

Friday, 22 May 2015

இயக்கங்கள் & பட்ட பெயர்கள்


80 களில், அதுவும் குறிப்பாக ஏப்ரல் 10, 1985ல் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் விடுதலை புலிகளால் தாக்கப்பட்டது முதல் ஜூலை 29, 1987ல் இந்திய இராணுவம் இறங்கும் வரையான காலப்பகுதி ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்கள் யாழ்ப்பாணத்தை கோலோச்சிய காலம்.

மோட்டார் சைக்கிள் பில்லியனில் குரங்கோடு கிட்டு மாமாவும் மிடுக்காக ரஹீமும் புன்னகைக்கும் திலீபனும் கம்பீரமாக மாத்தையாவும் தாடியோடு தோழர்களும் சாரத்தோடு மறவர்களும் எங்கள் மண்ணை வலம் வந்த பொற்காலம்.

இந்த காலத்தில் இருந்த இயக்கங்களிற்கு, பொடியள் என்று தான் சனம் கூப்பிடும், திரைப்பட பெயர்கள் பட்ட பெயர்களாக சூட்டப்பட்டன, அதுவும் காரணத்தோட தான்..

TELO - ரயில் பயணங்கள்
ரயில்களில் பயணிக்கும் ஆமிக்காரரை குறி வைத்து நடாத்திய சில தாக்குதல்களை மையமாக வைத்து..,

PLOTE - விடியும் வரை காத்திரு
இயக்களுங்குள் பெரிய இயக்கம், கெரில்லா பாணி தாக்குதல்களில் பெரிதாக ஈடுபடாமல், மக்கள் புரட்சியை ஏற்படுத்தி எல்லா ஆமி காம்பையும் ஓரேயடியா அடித்து நொறுக்கோணும் என்ற சித்தாந்தத்தில் இயங்கியதாக கருதப்பட்ட இயக்கம்..

EPRLF - தூறல் நின்று போச்சு
இராணுவ தளபதி தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் காரைநகர் கடற்படை முகாமை தாக்க முயற்சிக்கப்பட்ட தாக்குதலை தவிர வேறெதுவும் பெரிதாக செய்யாத்தால்...
இந்த தாக்குதலில் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி ஷோபா சாவினை தழுவியதாக ஞாபகம், அதை விட இந்த அட்டாக் பற்றி பல பகிடிக்கதைகள் அந்த காலத்தில் உலாவந்தன..

EROS - தூங்காதே தம்பி தூங்காதே
கடும் கொள்கை பிடிப்பும் intellectualismஉம் நிறைந்த இயக்கமாக வெளிப்பட்ட இவையல் ஒன்றுமே செய்யேல.. படித்த பெடியளிற்கு துவக்கு சரிவராது என்று சனம் கதைச்சது..

LTTE - அலைகள் ஓய்வதில்லை
தொடர்ச்சியாக கெரில்லா போர்முறையில் தமிழர் தாயகமெங்கும் தாக்குதலில் ஈடுபட்டமைக்காக..
சாவகச்சேரி, கொக்கிளாய், யாழ்ப்பாணம், டொளர் ஃபார்ம், அநுராதபுரம், பூநகரி என நீண்ட பட்டியல்..
இந்த பட்ட பெயரை வைத்து தான் தலைவர் பின்னாட்களில் பிரதான தாக்குதல் நடவடிக்கைகளிற்கு ஓயாத அலைகள் என்று பெயர் வைத்தவர் என்றுகூட ஒரு கதை..

நினைத்து பார்த்தா...
அது ஒரு கனாக்காலம்
நினைத்தாலே இனிக்கும் !

Thursday, 21 May 2015

நான் சமைத்தேன் omeletteமுக்கோணமாய் விறகடிக்கி
சாதுவா மண்ணெண்ணை தெளித்து
நைசாக பொச்சுமட்டை செருகி
சூர்யா மார்க் தீப்பெட்டியில் உரசி
அடுப்பு மூட்டி 
பொரியல் சட்டி வைத்து
ம்கூம்.. அதெல்லாம் இல்லாமல்
Style ஆக Fisher & Paykel cooktopல்
அலுங்ககாமல் switch போட்டு
Jamie Oliver saucepanஐ
நலுங்காமல் வைத்து
Meadowlea butter தடவி
வலக்கையில் free range முட்டை எடுத்து
இடக்கையிலிருந்த stainless steel கரண்டியால் உடைத்து
Iodised உப்பு தூவி
பதமாய் புரட்டி எடுத்து
நான் சமைத்தேன் omelette !
சமைக்க தெரியாது என்று
குற்றம் சாட்டுபவர்களிற்கு அர்ப்பணம்
டீ போட தெரியாது என்று
நக்கலடிப்பவர்களிற்கு சமர்ப்பணம்
The journey has just begun...
When is the next Master Chef comp ?

Sunday, 3 May 2015

உத்தம வில்லன்


நான்கு ஜாம்பாவான்களின் படைப்பு ஓகே கண்மணி.
ஒரு நிருத்தஞ்சய*படைப்பாளியின் ஜாம்பவ படைப்பு உத்தம வில்லன்.

"எவரும் எந்த பொருளும் தெய்வமானால்
கும்பிட்ட கூடம் போதும்
குப்பை கொண்ட சொர்க்கம் சேரும்
அகில உலகும் அழியும் அழியும்"

கதை, திரைக்கதை, இயக்கம், வசனம், இசை, கவிதை, பாடல், கதாநாயகன், வில்லன், காமெடியன் என இன்னாரென்ன திரையிலும் திரைக்கு பின்னாலும் "உத்தம வில்லனில்" ஆல் இன் ஆல் அழகுராஜா கமல்ஹாசன் தான்.

"நீ தொடாத உச்சம் உண்டா
சாதனைகள் மிச்சம் உண்டா
நான் கரைந்தேன் உன்னை கண்டால்"

நகுலேஸ்வரன் மாஸ்டர்ட டியூடரியில் கலைவிழாவிற்கு வில்லுப்பாட்டு செய்த பிறகு அதன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு யாழ்ப்பாணத்தில் என் பாட்டாவோடு பல அருமையான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை காணவைத்தது. உத்தம வில்லன் மூலம் அருகி வரும் அந்த கலையை மீண்டும் ஒருமுறை ரசிக்கும் வாய்ப்பு கிட்டியது.

"தானதந்தத்டோடு எழு
சந்தங்களும் தாழத்தொடு
சந்தங்களும் தாழத்தொடு
வான வம்பை உருவித்த கை
முன் தூமியோடு (ஆமா)
முன் தூமியோடு
அத்தனையும் மேளத்தோடு"

மன்னரை கக்கூஸிற்கு பல்லக்கில் அழைத்து செல்லும் காட்சி நம்ம JK யின் "படலையில் பதிவான "கக்கூஸ்" சிறுகதையின் தழுவல். அம்மாவாண சத்தியமா.. தம்பி JK தயங்காமல் கேஸ் போடலாம்.

"மாலா ஒளியாம் நியாயிரும் கூட
மற்றோர் யுகத்தில் போகும் கரிந்தே"

பாலச்சந்தர் வரும் காட்சிகளும் வசனங்களும் உணர்ச்சி ததும்புபவை. கமல்ஹாசன் தனது குருவுக்கு வெள்ளித்திரையில் அளித்த அழியா பிரியாவிடை உத்தம வில்லன்.

"சாகாவரம் போல் சோகம் உன்டோ
கேளாய் மன்னா!!
தீரா கதையை கேட்டபார் உண்டோ"

உத்தம வில்லனில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் அழகு தமிழ். வசனங்களாகட்டும் பாடல் வரிகளாகட்டும், தமிழுக்கு அமுதென்று பெயர் என்பதை உணரவைத்தது, ரசிக்க வைத்தது. தமிழை வாழ வைப்போம் என்று மேடையில் பலர் முழங்க செந்தமிழை அதன் செழுமை குன்றாமல் எளிமையாக அரங்கேற்றிய கமல்ஹாசன் வாழ்க.

"பூதம் ஐந்தும் பொருந்திய பொருளோ
வேதம் நான்கும் விளங்கிய உருவம்
இரவும் பகலும் அகமும் புறமும்
பிரிவற்றிடும் சாக வரமுடையான்
புரிந்திது புரிந்திது புரிந்திடு நீ
முடிவுரை என்றொன்று இல்ல காவியம் நான்"

லிப் லாக் சீனில் நடித்து கமலின் முத்த நடிகைகள் லிஸ்டில் promotion கிடைத்த ஆன்டரியாவிற்கு ஒரு பாட்டு சீன் குடுக்காதது வருத்தமளிக்கறது. கொடியில் பலாப்பழம் போல் கமலை பூஜா இடுப்பில் தூக்குவது too romantic for Tamil cinema.

"முத்தத்தின் ஆசானே
உனை உணர்வாய் செய்தாய்
லவ்வா லவ் தான்
பெரிதான வேலைக்கு
பிள்ளையார் சுழி தான் முத்தம்
வாடி லவ்வா"

உத்தம வில்லன் - One Man Show, an Excellent and Emotional One Man Show.

"விழுங்கி துலங்கிடும்
வம்சம் வாழ
வாழும் நாளில் கடமை செய்ய
செய்யுள் போல் ஒரு
காதல் வேண்டும்
காதல் வேண்டும்
செய்யுள் போல் ஒரு- காதல் வேண்டும்"

*நிருத்தஞ்சய - சாகாவரம் பெற்ற