Total Pageviews

Friday, 24 April 2015

தந்தை செல்வா நினைவு பேருரை



தந்தை செல்வா நினைவு பேருரையாற்ற முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைக்கப்பட்டது, சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டதின் நீட்சியாகவும் தமிழ் மக்களின் உணர்வுகளிற்கும் தமிழரசு கட்சியின் தலைமையின் புரிதலிற்கும் இடையிலான இடைவெளியின் நீட்சியாகவும் வெளிப்படுகிறது.

1994ல் "சமாதான தேவதையாக" அவதாரம் எடுத்த அம்மையார் ஆட்சியில் தான் யாழ்ப்பாணம் பறிபோக கிரிஷாந்தி உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் செம்மணியில் புதைக்கப்பட்டது மறைக்கபடமுடியாத வரலாறு.

1999ல் "அருந்தப்பு தப்பிய" அம்மையார், புலிகள் "உபயத்தில்" ஆட்சி கட்டிலில் மீண்டும் ஏறி, 2002ல் ஏற்பட்ட ரணில்-பிரபா சமாதான உடன்படிக்கையை குழப்புவதில் முழுமூச்சாக ஈடுபட்டார். 31 ஐப்பசி 2003ல் விடுதலை புலிகளால் தயாரிக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழியப்பட்டு, நாலாம் நாள் ரணில் ஆட்சியை குழப்பி சமாதான பேச்சுவார்த்தைக்கு ஆப்பு வைத்தது மறக்கப்பட முடியாத வரலாறு.

2000ம் ஆண்டு மலர்ந்து ஐந்நாம் நாள் சிங்கத்தின் குகைக்குள் இருந்து உறுமிய புலி, மாமனிதர் குமார் பொன்னம்பலத்தை படுகொலை செய்ததில் அம்மையாரின் பங்கை Sunday Leader விலாவாரியாக விசாரித்து விபரித்தது. குமாரின் வலிமையான கருத்துக்களையும் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள சனநாயகவாதி சந்திரிகா தெரிவு செய்த உபாயம் "படுகொலை" என்பது மன்னிக்க முடியாத வரலாறு்

The Sunday Leader newspaper wrote at around the time of the first anniversary of his death:

“There is now clear evidence that Kumaratunga knew the identities of the murderers of Kumar Ponnambalam at least shortly after the murder was committed, if not before. She failed to order an inquiry. She failed to disclose the information in her possession to the proper authorities. Worst of all, she failed at least to distance herself from the murderers, whom she continued to entertain at President’s House. And more startling evidence is still to follow.”

மகிந்த ராஜபக்ச எனும் பேயை கலைப்பதில் பெரும்பங்கு வகித்ததன் மூலம் மேற்சொன்ன பாவங்களை கழுவி சந்திரிக்கா ஞானஸ்னானம் பெற்றுவிட்டார் என்று தமிழரசு கட்சி தலைமை மட்டும் நம்பலாம்.

வரலாறு
மறைக்கபட முடியாதது,
மறக்கப்பட கூடாதது,
மன்னிக்கப்பட விரும்பாதது

"இயற்கை என் நண்பன்,
வாழ்கை எனது ஆசான்,
வரலாறு என் வழிகாட்டி"
தேசிய தலைவர் பிரபாகரன்

No comments:

Post a Comment